Wednesday, September 22, 2010
"முத்த சங்கீதம்..!"
மென்னிதழ் கவ்விய வன்னிதழ் வருடல்
சுவைத் தேன் சொட்ட சுவைத்தே
நுண்ணிய நுகர்ச்சித் தழுவல் சுக
மென்னிய நாசிக் கேறும் கிறக்கம்.
மல்லி மணமள்ளி வரும் அவள்
குழல்காற்று மார்தழுவச் சொல்லித் தரும்
இதழ்பிரித்த இமை மயிர் கூச்செறிய
கலந்த கண்கள் செருகத் தெரியும்.
சொர்க்க சுகமதில்...! நெற்றித் திலகம்
இடமாறும் இறுகப் பற்றிய கரம்
உரமேறும் குழைந்த தேகம் சூடேறும்
குறுங்கழுத்து வியர்வையில் குழலெழுத்து
கூறும் கொக்கோகணார் இலக்கணம்.
மொட்டவிழும் மோகவெடிப்பு....! முனகல்
மெட்டெழுதிப் பாடல் படிக்கும்.
கட்டவிழும் காளை விட்டவிழும் காமம்
பட்டவிழும் பெண்மை மொட்டவிழும்
தொட்டவிழும் கூந்தல் பூச்சரியும் மார்
தேன்சொரியும் இதுகாறும் கட்டிவைத்த
ஆசைத்தீ எரியும்....! ஆங்காங்கே வியர்வை
நெய் வடியும் அங்கங்கள் மெய்மறக்கும்.
குறுநகை கொப்பளிக்கும் கன்னக் கதுப்பில்
செவ்விதழ் வண்ணத்தில் செந்நா சித்திரமெழுத
மேல்கீழ் மூச்சில் மௌனப் புயல் வீசும்.
கரும்பு கண்ட யானையாய் காளை...
யானை கண்ட பாம்பாய் பாவை...
முகிழ் முத்தச் சத்த மொத்த
இராக முண்டோ சங்கீதத்தில்.
****************************************
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
arumaii
எமது பதிவுக்கு முதல் வருகை தரும் எல்.கே வுக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
/ மொட்டவிழும் மோகவெடிப்பு....! முனகல்
மெட்டெழுதிப் பாடல் படிக்கும்.
கட்டவிழும் காளை விட்டவிழும் காமம்
பட்டவிழும் பெண்மை மொட்டவிழும் /
இவ்வரிகளை தாண்டி வரமுடியவில்லை
/ மேல்கீழ் மூச்சில் மௌனப் புயல் வீசும். /
அழகு
//கரும்பு கண்ட யானையாய் காளை...
யானை கண்ட பாம்பாய் பாவை...//
அருமையாக உவமை புகுத்தி கவியாடுகிறீர்கள்...
ரொம்பவே ரசிச்சேன்...
அருமை...
ஆஹா..... எங்கேயோ போயிட்டீங்க...... !!! சூப்பர்!
வாழ்த்துக்கள்!
Wow...
tamil ingey vilaiyandirukkirathu...
uvamaikal arumai...
rasiththean ungal THEAN kavithaiyai...
வாங்க வினோத் தோழா...!
முதல் வருகை தரும்.....
சகோதரி ......சித்ரா..வாங்க..!
தோழர்...ஜெயசீலன்...வாங்க..!
வாங்க... குமார்....! எப்படி இருக்கீங்க...?
உங்கள் அனைவருக்கும்...
நட்பையும், நன்றியையும்...
தெரிவிக்கிறேன்.
கருத்துகளுக்கும்....தான்.
வாவ் , அருமையான் கவிதை
Post a Comment