Sunday, September 26, 2010
"முத்து...!"
உப்புலகம் உவந்து வாழும் சிப்பி
உன் பூர்வீகம் வான்வெளி விட்டிறங்கும்
மழை வரவேற்க வாழ்விட மிட்டேகும்
சிற்றுயிர் வாய்ப்பிளந்தே வாங்கும் நன்னீர்.
தாழடைக்கும் கதவு...தவம் செய்ய
மெல்ல மெல்ல குடியேறும் மெருகேறும்...
உருண்டு திரண்டு உலகம் காட்டும்.
நன்முத்தாய் வெண்முத்தாய் விளைந்து காட்டும்.
கால்சியப் பேழையின் காப்புரிமை உனக்கு.
கடலுக்கு சொந்தமாய் நீ இருக்கும்வரை.
காசுக் கலைந்தேகும் மனித மாசுக்
கையில் கிடைத்திட்டால் நல்விலைக்கே வித்திட்டார்.
சிப்பியை சிதைக்கும் சில்லறை புத்தி
முத்துக்காய் சிப்பிக்கு கல்லறை கட்டும்.
ரத்தினமாய் நீ...உன் பெயர்
கொண்ட மானிட ரத்தினம் யார்..?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Sippi romba nalla irukku.
Post a Comment