Wednesday, September 01, 2010

சிறுசும்..!. பெருசும்...!!


கொள்ளை யழகு வெள்ளை நிறம்
காண உள்ளம் துள்ளுமுன்னை போல்
எனக்கும் குட்டை வாத்து பிடிக்க
குளத்துக் குள்குதிக்க கும்மாள மடிக்க
இளம் பிராயத்து ஈடேறா ஆசைகள்
உள்ளம் துடிக்க உதடு மடித்து
ஏமாற்றம் சொல்லும் வெகுளித் தனம்
கண்கள் கலங்கும் காணாமல் போன
பட்டாம் பூச்சிக்கும் தட்டாம் பூச்சிக்கும்
சிறகு முளைக்கு மென்சிந்தைக்கு தூரம்
பொருட்டல்ல உனை தொடரும் வரை.
யாருமிலா பெருவெளி நமக்கு இன்பம்
சிற்றுயிர் யாவும் நம் தோழமை
குஞ்சுகளிலும், பிஞ்சுகளிலும், கூட்டாஞ் சோறு
சமைத்தே குதூகளிக்கும் பேதமில்லா அன்பு....
முதுமைக்கு மட்டும் முரன்பாடாய் போவதெப்படி..?
இங்கே தொலைத்த வாழ்வை வேறொங்கோத்
தேடும் பெருசுகள் முன் நாமும்
தேடுவதாய் நடித்து "நம்வாழ்வு" தொடர்வோம்...!.

No comments: