Sunday, September 26, 2010

"இலை மறையாய்..."


7 கோடி மனிதம் நிறைந்த தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்போரே.........!! சற்றே உங்கள் மனதை என்னிடம் திருப்புங்கள். "குரங்கு கையில் கொள்ளிக் கட்டையாய்" தமிழகம்......., பற்றி எரிவதைக் காட்டுகிறேன்.

# இலவசம் தந்தே இருக்கும் மக்களை....ஏமாற்றும், உங்களின் உள்நோக்கம் "வாக்கு வங்கி", கோட்டைக்குள் வசிப்பதே குதூகலம் என்றே ஓட்டு வேட்டைக்கு தயாராகும்...., உங்கள் தந்திரம்.

# ஒரு ரூபாய் அரிசி தந்தீர்..., எதன் அடிப்படையில்., விவசாயப் மூலப் பொருள்களின் விலை வீழ்ச்சியின் காரணமா.? நடைமுறைக்கு சாத்தியமில்லாத சலுகைகள் எதற்காக?. தினக் கூலி, உரம், விதைகள், நீர்ப் பாசன குத்தகை, டீசல் இப்படி எல்லாம் விலை ஏறி நிற்க.. அரிசி மட்டும் 1 ரூபாய் என்றால்.., நியாயமா?. இதன் விளைவுகள் எண்ணிப் பார்த்தீர்களா?.

# ஒரு ரூபாய்க்கு அரிசி என்றதிலிருந்து......, சந்தைகளில் கிடைக்கும் அரிசி இரகங்கள் இருமடங்கு விலை ஏற்றம் பெற்றுள்ளன. 1 கிலோ 16 ரூபாய்க்கு விற்ற அரிசி... இன்று 32 ரூ. ........ எந்த மாற்றமுமில்லாமல். உப்பு முதல் பருப்பு, மிளகாய், மஞ்சள், என அத்தனை மளிகைப் பொருட்களும்...., 3 மடங்கு விலையேற்றம். சமையல் எண்ணெய் 2.5 மடங்கு விலை ஏறியிருக்கிறது.

# அரசாங்க செலவில் .......... இலவச தொலைக்காட்சிப் பெட்டி தந்தீர், ஆனால்... கேபிள் இணைப்பை ஏன் கிடப்பில் போட்டீர்?. சொந்த குடும்பம் பிழைக்கவா? தழைக்கவா?, அதற்கு எதற்கு அரசாங்கப் பணம் வீணாக வேண்டும்?

# ஒரு இணைப்புக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை வசூலிக்கப் படும் வாடகை பணம், தமிழக மொத்த இணைப்பையும் சேர்த்துப் பார்த்தால்..., சுமார் 2 கோடி. மொத்த வாடகைப் பணம் ரூ.300 கோடி. ஒவ்வொரு மாதமும் இவ்வளவு பெரிய தொகை இப்போது யாருக்குப் போய்க் கொண்டிருக்கிறது?. இந்த வருமானம் அரசுக்கு தேவை இல்லையா?.. ஏன் இதை அரசு இழக்க வேண்டும்?.

# மதுபான சில்லரை விற்பனை மூலம் "சில்லரைப்" பார்க்க துணிந்த அரசுக்கு...., கேபிள் இணைப்பு கசக்கிறதோ?. 700 கோடி ஒதுக்கிய தொகை என்னவாயிற்று?.

# வியாபார தந்திரம் என்னும் பெயரில்... அவசியப் பொருள் பதுக்குவது, பதுக்குவதின் மூலம் செயற்கையாய்... "தேவை அதிகரிப்பை" உருவாக்கி..., அதை காரணம் காட்டி விலை உயர்த்தி இலாபம் பார்க்கும் வில்லங்கம். அவசியமில்லாமல் அத்தியாவசியப் பொருட்களுக்குள் "ஆன்லைன்" வர்த்தகம் நுழையவிட்டு அதன் மூலம் விலை ஏற்றம். இவற்றை கட்டுப் படுத்த வேண்டிய அரசும், அதிகார வர்க்கமும் கையாலாகாமல்....கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறீர்களா? அன்றி... வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு "முதலாளித்துவ முதலை" க்கு நன்றி.. காட்டுகிறீர்களா? உங்கள் "வாடிக்கையாளர்" விசுவாசம் பாராட்டுக்குரியது. "தேர்தல் தேவைக்கு.... உங்கள் புகலிடம் அந்த முதலைகள். அவர்களின் திருட்டுத் தில்லுமுல்லுகளுக்கு அடைக்கலம் நீங்கள். "நல்லக் கூட்டணி?!!"

# பாவம்..... அப்பாவி தமிழக மக்கள்.? சுயமாய் சிந்திக்காத படி சீரியல் மயக்கமும், சோம்பேறித் தனமும், சோரம் போகும் புத்தியும், கிடைத்தவரை இலாபம்... என்ற பொறுப்பற்றத் தன்மையையும்.... நாம் தாண்டாதவரை நம் தலைஎழுத்து மாறாது...மக்களே...!! மாறாது.

# அடிப்படை பொருட்களை விலையேற்றி விட்டது பற்றாது என்று... இப்போது... இலவச வீடு? வேறு. நல்லத் திட்டம் போல் தோன்றினாலும்...., உள்ளுக்குள் "மகா தகிடுதத்த" வேலைகள் நடப்பது தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறீர்களா? இலவச வீடு அறிவிப்பு வந்த நாட்கள் தொட்டே கட்டுமான பொருட்களின் விலையேற்றம் எதனால்? இது சொந்த காசு போட்டு வீடு கட்டியவன், கட்டுபவன் நிலை என்ன யோசித்தீரா?.

# எம்.எல்.ஏக்களுக்கு எதற்கு கடற்கரை சாலையில் பட்டா மனை இலவசமாக? அவர்கள் யாரும் வீடில்லாமல் இருக்கிறார்களா என்ன? ஆளாலுக்கு... ஊருக்கு ஒரு சின்ன வீடும், பெரிய வீடுமா இருக்கிற விபரம் தெரியாதா என்ன? ( நான் வீட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். ) மக்கள் சேவை செய்து இளைத்து..! களைத்த......!! எம்.எல்.ஏக்கள் ஓய்வெடுக்கும் கூடாரமா?. "தேவைதான்". நம்ம காமராசரையும், கக்கனையும், ..சி யையும் கொஞ்சம் மனசாட்சியோடு நினைத்துப் பாருங்கள்.

# இவர்கள் கடற்கரையில் ஓய்வெடுத்திருந்தால்........, இன்று தமிழகம்....... எப்படி இருக்கும்.? உலகின் மிக கேவலமான இடமாக இருந்திருக்கும். அவர்கள் செய்து விட்டு போன சீர்திருத்தம்...., "நம்மை இப்படி ஆடச் சொல்கிறது.!!" .

# பெரியார், அண்ணா, காமராசர் பெயர்களை எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? எந்த தகுதியில்? ஒன்று தெரியுமா? நம்முடைய மெட்ரிக்குலேசன் மோகத்தால்..... இன்றைய இளம் தலைமுறைகள் ...."இவர்களை" யார் என்றே தெரியாமல் வளரும் கொடுமை தெரியுமா உங்களுக்கு? தேசிய கீதம், நாட்டுப் பண் பாடாத பள்ளிகள் கணக்கெடுக்க முடியுமா உங்களால்?.

# உங்களின் செயல்கள் எல்லாமே.........., இலைமறையாய்..... உங்கள் சந்ததிகளுக்கு மட்டும், காய் மறையாய்......... முதலாளி முதலைகளுக்கு மட்டும் நன்மை பயக்கும்...... என்றால் .., இது "நயவஞ்சகம்" இல்லையா?

# இனியேனும் இலவசம் நிறுத்தி... மக்களை நல்வழிப் படுத்தி, உங்களால் முடிந்த உருப்படியான காரியம் ஆற்றுங்கள். அது மட்டுமே உங்களை காலம் கடந்தும் வரலாற்றில் பதிக்கும்.

# இறுதியாக...... தன் ( மகனுக்கு ) சமூகத்துக்கு மீன் வாங்கித் தரும் தலைவனை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் தலைவனே சிறந்தவன். ( நான் சமூகம் என்றது.. தமிழக மக்களை, குடும்பம் என்ற குறுக்குப் பொருள் கொள்ள வேண்டாம்).
இனியேனும் யோசிப்பாயா .... என் இனிய இளைய.... தலைமுறையே...!?

# கொசுராக ஒரு செய்தி.... மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கான தினக்கூலி ரூ.100. ஆனால் நடப்பது என்ன தெரியுமா? அடித்தட்டு மக்கள் வாங்கும் கூலி ரூ.80 மட்டுமே. தலைக்கு ரூ.20 இலஞ்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் பெயர் மட்டும் கொடுத்து விட்டு வேலை செய்யாமல் கூலி வாங்கும் "கிராமத்து கெத்துக்கள்" கதை வேறு.

# இலவச வீட்டின் மதிப்பு ரூ.75000/- , நபருக்கு வழங்கபடுவது ரூ.60000 முதல் ரூ.65000 வரை மட்டுமே என்பது குறிப்பிடத் தகுந்தது.

2 comments:

நிலாமகள் said...

பொறி கிளப்பும் சொற்கள் ... அனல் தகிக்கும் அர்த்தங்கள்.... எழுச்சி ஊட்டும் வரிகள்... வாழ்த்துகள்!

தமிழ்க்காதலன் said...

புதிதாய் வருகைத் தரும் நிலா மகளுக்கு.....
வாங்க..., தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாருங்கள்.