Friday, September 24, 2010

"காதல் வரக் காரணமானால்..!!".


சின்ன சின்னதாய் பரிசு தந்து
சிற்சில நேரம் இரத்தம் சிந்தி

கடனாய் காதல் மடல் வாங்கி

சுயமென சொல்லி வரும் காதல்...

"கழிவிறக்கம்".
******************
**********

கவிதை புகழுரை கட்டுரை யென

கன்னியின் பாகம் பிரித்து இடம்

சுட்டி பொருள் விளக்கம் தரும்

புலகாங்கிதம்....!, காதல் வர காரணமானால்....

"மதி மயக்கம்".
******************************

சுயமற்று சுகமற்று சிந்தை களக்கமுற்று

நாயகி முன்பின் முகம் காட்டி

உடலுயிர் வற்றி சுற்றித் திரிந்து...
தொலைத்த வாழ்வில்...கிடைத்த காதல்...
"அறியாமை".
*******************
*********

நட்பின் தங்கை, நம்பியவர் இல்நங்கை
ஏற்புடை நங்கையின் காதல் மறுப்பு,

பிற பெண்பால் காதல் தூண்டல்,

காதலியின் தோழி மீதேறும் காதல்...

"துரோகம்".
****************************

அழகியல், புறத்தியல், தோற்றப் பின்புலம்,
நடத்தை, நாகரீகம், குடும்ப சௌகரியம்,

பேரன் காலம்வரை போதுமான பொருளாதாரம்,

இடம் பொருள் யாவும் பார்த்த காதல்....

"சுய நலம்".
********************************

3 comments:

Chitra said...

ஒவ்வொன்றும் முத்து!

(பி.கு. நேரிடையாக பின்னூட்டம் இடுவதற்கு இயலவில்லை. உங்கள் Profile click செய்து மீண்டும் இடுகையில் கமென்ட் click செய்து வர வேண்டியது இருக்கிறது. இதனால், பின்னூட்டங்கள் இட விரும்புவோர், இட முடியாமல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.)

வினோ said...

அருமை அருமை ரமேஷ்..
புதியதாக இருக்கு இந்த நடை

தமிழ்க்காதலன் said...

வாங்க சகோதரி...,
வாங்க தோழா...,
உங்க கருத்துரைக்கு...
மிக்க நன்றி.