Tuesday, September 21, 2010

"வளர்ச்சி..!"


நம்பிக்கையோடு காத்திருக்கேன்
நாளை விடியும் விடியல்கள்
எனக்கானதாக இருக்கும் என்று.

எனக்காக உன்னை அழித்துக் கொள்ளாதே..!
என் எழுச்சியின் நம்பிக்கை நீ...நான்
இருள் துழாவ நேர்ந்தாலும் என்னோடு
இரு எனக்கான சூரியனாய்...!

ஒன்றழிந்து மற்றொன்று வருவது உலக
நியதி யென்றாலும் உடன் பாடில்லை
உன்னை "நான்" எரிப்பதில்...என்
வளர்ச்சி உன்னை அழித்தல்ல...!!
உன்னோடுதான்.

4 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku kavithai.

'பரிவை' சே.குமார் said...

ungal idugaiyai indliyil inaithtean. inaithavari peraril en peyar vanthullathu... Ottukkal ungalukku varum.

தமிழ்க்காதலன் said...

தங்களின் தமிழ்த் தாகத்திற்கும், என் மேல் கொண்ட அன்பிற்கும் மிக்க நன்றி தோழா..!

வினோ said...

/ எனக்காக உன்னை அழித்துக் கொள்ளாதே..!
என் எழுச்சியின் நம்பிக்கை நீ...நான்
இருள் துழாவ நேர்ந்தாலும் என்னோடு
இரு எனக்கான சூரியனாய்...! /

பல விசயங்கள் சொல்கிறது நண்பா..