Tuesday, September 28, 2010

"பிம்பம்...!!".


பிளவுற்ற வெடிப்புக் கிடைக் கசியும்
உதிரத் திரள் வழியே மின்னும்
சூரியன் சுட்டெரிக்கு மென்னிதழ் வாடியே
நெக்குருகும் எச்சில் பூசும் உன் நாவுக்காய்.
****************************************************
உலர்ந்து சருகாய் உதிரும் ரோமத்தில்
கடந்தகால காதலின் மிச்சங்களும் மிளிறும்
அழிந்து வரும் ரேகையூடே அழியுமென்
நினைவுக் காப்பக சிலிக்கான் சில்லுகள்.
*****************************************************
குரோமோசோம் களுக்கிடை குந்தி யிருக்கும்
நின்னுருவம் வார்த்தெடுக்கும் என்மரபணு
எனது வாரிசாய் நின்னை...!! எனக்கு
கதவடைத்த நின்தந்தை வாயடைக்கும், பிள்ளை.
*********************************************************
உயிர் கலந்தபின் உடல் பிரித்த
பாவம்... புரியும்.. !! என் வேதனை.
நின் தந்தை போல் இன்னும் யாராரோ...?
நினைத்துப் பார்த்து பயனிலை பின்நாளில்.
**********************************************************

3 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithai arumai nanba...

neraminmaiyal ungal munthaiya kavithaiyai ippothan padiththean super.

வினோ said...

அருமை அருமை நண்பரே..

கடந்த இரண்டு பதிவுகளில் பின்னூட்டம் போட முடியவில்லை.. அதை சரி செய்யவும்..

தமிழ்க்காதலன் said...

வாங்க வினோ.. மிக்க நன்றி.

வாங்க குமார்.., மிக்க நன்றி.

தொடர்ந்து வாருங்கள்.