Thursday, September 23, 2010

"நானும்...! தேநீரும்..!!"



வெறித்து பார்த்த விழிகளில் வெற்றுப்பார்வை.

நினைவற்றுப் போன நெஞ்சம் நிலைக்குத்தி

நின்றபடி... கரமேந்திய தேனீர் கோப்பை

சூட்டில் நிசம் சொன்னது நிகழ்க்காலம்.


பழுத் துதிரும் பழுப் பிலைக்கும்

பருவத் துதிரும் பச்சை இலைக்கும்....
இருக்கும் இடைவெளியாய் என் நெஞ்சகத்து
இருக்கும் நினைவுதிரும் உணர்வதிரும்.


மிடறு மிடறாய் விழுங்கும் நினைவுகள்...

குடிப்பதாய் தோன்றும் கோப்பைத் தேனீர்...!!

அம்மாவுக்கு...., நடிப்பதாய் தோன்றும் எனக்கு.

நுரைத்து நின்ற தேனீர் நீர்த்து


நின்றது....கோப்பை நிரம்பும் கண்ணீரால்.

நிரப்பிக் கொண்டே இருந்தது நிகழ்காலம்...!

நிரம்பிய படியே இருந்தது என் இறந்தகாலம்..!

நடுங்கும் கோப்பையில் நடுங்கிய எதிர்காலம்..!!

இதழ் பிரித்தால் இல்லாத மலர்போல்
நினைவுகள் உதிர இல்லாத மனம்.

நசுக்க நசுக்க நாறும் பூவாய்...

நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்கும்..!.


உன்னைப் போலவே...நானும் உதிர்க்கிறேன்

உணர்வை..!. ..நினைவை....! மற்றவர்க் கழகாய்...!!!
உதிரும் இதழ் அழகு..உயிர்த்திறு..!. மறுபடி
உதிர்க்க...!! உன்னோடு நானுமென் நினைவும்.
*********************************************************

4 comments:

வினோ said...

/ இதழ் பிரித்தால் இல்லாத மலர்போல்
நினைவுகள் உதிர இல்லாத மனம்.
நசுக்க நசுக்க நாறும் பூவாய்...
நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்கும்..!. /

அருமை நண்பரே...

பிரிவின் வலி

Anonymous said...

அற்புதமான கவிதை...

Chitra said...

நின்றது....கோப்பை நிரம்பும் கண்ணீரால்.
நிரப்பிக் கொண்டே இருந்தது நிகழ்காலம்...!
நிரம்பிய படியே இருந்தது என் இறந்தகாலம்..!
நடுங்கும் கோப்பையில் நடுங்கிய எதிர்காலம்..!!


....உங்கள் கவிதையில், உணர்வுகளை வார்த்தைகளில் உருவேற்றி இருக்கிறீர்கள்.

தமிழ்க்காதலன் said...

// எமது பதிவிற்கு முதல் வருகை தரும் நண்பர்..,ஆதித்த கரிகாலன் அவர்களுக்கு வணக்கம், வாங்க. உங்க கருத்துரைக்கு நன்றி. உங்கள் பெயர் மிக நன்றாக இருக்கிறது நண்பா...., தொடர்ந்து வருகைத் தாருங்கள்.

// வாங்க சகோதரி சித்ரா, உங்கள் கருத்துரைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.