இதயத்துக்கு
அருகில் இருக்கும் சத்தியமே..!!
இருத்தல் மீதான
இழப்பின் வருத்தம்
இனியும் வேண்டா
தூய்மையே - பெயரில்
இருக்கும் சத்தியம்
வாழ்வில் வாங்கு
பொங்கும் கண்ணீர்
புடைசூழ் கன்னம்
புடைக்கும்
மடையில் விடைத் தேடும்
விதியின் வழியை
மடை மாற்று..!!
மதியின் துணை
உண்டு – மாறாதே
நிலை கண்டு
வீழாதே, - சூழ்வினை
நிலை என்று
மாயாதே பாழ்வினை
அழியும் விதி
சொல்வேன் கேள்
வழியும் சொல்வேன்
வாழ்...!! நீ
கொள்ளும் பழியும்
- ஊழ்வினை தள்ளும்
பள்ளம் கண்டு
பயம் வேண்டா.?! வெல்லும்
வழிகளும் வெகுவுண்டு
மீள்..!! கொல்லும்
துயர் துடைக்கும்
கரங்களும் காண்..!!
அயர்ச்சி ஊட்டும்
தளர்ச்சி மீட்டும்
தாலாட்டு கேட்காதே..?!
நாண் ஏற்று
நரம்பில் யாழ்
மீட்டு - நல்லன
நாடிவரும் நாடியின்
சூட்சுமம் அறி..!!
வாடியும் வதங்கியும்
நாளும் நலிந்து
உள்ளமும் உடலும்
சோர்ந்து மெலிந்து
பள்ளம் மேடுகண்டே
தாண்டவும் தளர்ந்து
உள்ளம் நோகும்
உயர்ந்த ஊமையே..!!
நெஞ்சுக்குள்
வை இதை – பாதியை
பிரிந்த பதியே
கேள் – நீதியை
நிலைத்த சோதியை
உறுத்தும் சதியை
பிடித்த கதியை
மாற்றும் கலையை
வாதிட்டுப் பகரும்
வல்லவன் சொல்
சோதிக்காமல்
கேளப்பா..!! சொல்லும் வெல்லும்
தமிழ் சொல்லும்
கொல்லும் விதியை
மாற்றும் மருந்து
கொள்வாய் – இன்றே
ஊரும் உதவாது
உறவும் நெருங்காது
யாரும் இல்லாது
ஏதும் கொள்ளாது
இருந்த காலம்
போய் – இனி
செழிக்கும்
கோலம் காண்பாய்
மூர்த்தி தாங்கும்
நெஞ்சுநிறை நினைப்புகள்
கீர்த்தி கொள்ளும்
நேரம் நெருங்க
நேர்த்தி யாகநீர்
நலம் யாவும்
போர்த்தி கொள்வாய்
உறுதி கொள்..!!
உனக்கும் எனக்கும்
ஒரு தொப்புள்கொடி
உறவுண்டு –
கோப்பெருஞ் சோழனோடு பிசிர்
ஆந்தை கொண்ட
நட்பின் நீட்சி
நீயும் நானும்
– அஞ்சாதே அருகே
நான் நட்பென
நாளும் நிழலாய்
நிசம் முன்னே
நிற்க..!! கற்க
பாசம் அன்பு
பரிவு காட்டும்
உறவும் உன்னுள்
உனக்காய் உண்டு
கண்டுகொள்...!!
கவலைவிடு,- கொண்ட தல்ல
உறவு,- நாம்
தேடி கண்டதும்
உறவே,- உண்மை
உணர் ..!! பின்வாங்கி
முன்பாயும்
அம்பென புறப்படு – வாழ்வில்
ஆற்றும் வினைகள்
பலவும் நன்மையாய்
சாற்றும் கட்டளை
கல்லாய் மாற்றும்
விதியை பாழ்வினைத்
தொடர் துயர்
துடைத்தே நீதி
வெல்லும் நெஞ்சே...!!
நீ இழந்ததும்
இழப்பல்ல – உன்னை
இழந்தார்க்கு
நீயே இழப்பு,- தன்னை
கொடுப்போரை
தாங்கும் அன்பில் விடு
அழைப்பு,- வாழையின்
அடியில் வளரும்
வாழையென வேர்களில்
துளிர்க்கும் அன்பு
வீழாது முழுமை
காணாது – எழு
சத்தியமே நித்திய
மெனும் வாழ்க்கை
கொள்..!! மூர்த்திகள்
சாய்வதில்லை சத்தியமே..!!
1 comment:
அருமை நண்பா...
Post a Comment