Friday, June 18, 2010

காதலி...!




கல்வாரிக் குகைக்குள்
கர்த்தரை வைத்த நிமிடங்களாய்....
மரித்துப் போன மகனை எண்ணி
மனம்துடித்த மாதாவாய்...
மனம் கனத்துக் கிடக்குது கண்மணி...!
**************************************
நின்னை நினைத்தேங்கும்..
ஏழை என் நெஞ்சுக்கு
எப்படிச் சொல்வேன்...?
உனக்கும்...எனக்குமான
ஒட்டும் உறவும்...
உதிர்ந்துபோன ....வினாடிகளை...!!
நிசம் தப்பிப்போன
நிமிடங்களை....
நிச்சயமாய் ஏற்க மறுக்கும்...
ஏழை என் நெஞ்சுக்கு...
எப்படிச் சொல்வேன்...?
கடந்து போன காலத்தையும்,
நிகழ்ந்துபோன நிசத்தையும்....??
**********************************
இறந்துபோன பின்பும்
ஈட்டியால் குத்தியவனுக்கும்...
குருதி சிந்தி குருடை நீக்கிய
கருணாமூர்த்தியாய்....
நான் இறந்து....
காதல் ஈந்தக் கதையை...
எப்படிச் சொல்வேன்...?
ஏழை என் நெஞ்சுக்கு.
இறந்த காலத்திலேயே
இறந்துக் கிடக்கும் ...
என் மனதை...
உயிர்பிக்கும் வல்லமை...
உன்னையன்றி....வேறு யாருக்குண்டு??
கடவுளுக்கும் கை கூடாத காரியமல்லவா??!
**********************************************
இறந்து கிடப்பது என் உடல் என்றால்...
இப்படி கலங்கி இருக்க மாட்டேன்..கண்மணி.
உடைந்துக் கிடப்பது...
உன்னையே சுமந்து...உனக்காய் வாழ்ந்த
என் ஏழை இதயம்.
********************
ஆடைக் கிழித்துக் கொண்டவனையே
பைத்தியம் என்கிறது பார்...கண்மணி.
மனதை கிழித்துக் கொண்டவனுக்கு
என்னப் பெயர்....!
*******************
என் நினைவும் தப்பவில்லை...
என் நினைவிலிருந்து நீயும் தப்பவில்லை.
இருந்தும் நான் ஏன் இப்படி..??
கடவுளைத் தேடும் உலகில்
காதலி...உன்னைத் தேடும் ஒருவனாய் நான்.
**********************************************
என் காதல்...
புரிந்தவர்களுக்கு...
கடவுள் புரிந்திருக்கும்.
பாவம்..! நீதான்
கடவுள் காணாதவளாயிற்றே...!
என் காதலை எப்படிக் காண்பாய்..?
முறிந்துபோனதாய் சிலரும்...
முடிந்துபோனதாய் சிலரும்....
நடந்துபோன நம் காதலை....
சிலாகிக்கிறார்களாம் சில பேர்.
உனக்குள்ளும்...எனக்குள்ளும்
உயிர்வாழும் காதலை யாரறிவார் கண்மணி..!
************************************************
எனக்குள் உயிர் இருக்கிறதா...?
என்கிற கேள்விக்கு....
நீண்ட காலமாய் "நிசப்தமே" பதிலாகிறது.
என் சுவாச சூட்டில்...
என் இதயம் கருகும் வாசம்...
எனக்கு மட்டும்தான் வீசுகிறதா?...கண்மணி.
மல்லிகையின் மடல் வாடினால் தாங்காதவள் நீ..!
பின் எப்படி...என் இதயம் இப்படி..?
நினைவிருக்கிறதா...என் நேசமே,
விடியல் எனும் விபரீதம் ...
நடந்துவிடுமோ என்றெண்ணி....
ஒற்றைக் கால் மாற்றி...மாற்றி....
நின்றவாறே நெடுந்தவம் செய்த...
நாட்கள்.
மூன்று சென்மம் பேசியிருக்க வேண்டியதை...
மூன்றாம் சாமத்திலேயே பேசிவிடுவோமே...
நினைத்துப் பார்ப்பதுண்டா என் நெஞ்சமே...!
***********************************************
இன்னும் உன் காதலன்...
எந்த கல்லரையிலும்...
விளக்கேற்ற வில்லை.
ஏன் தெரியுமா...கண்மணி..!
என் காதலை...
நான் புதைக்கவில்லை.
விதைத்திருக்கிறேன்.
விருட்சமாகும்....நிச்சயம்
விருட்சமாகும்.
மனம் சோர்ந்து போகும்போது
நீ வந்து இளைப்பாறிச் செல்.
நீ மட்டும்.
******************************

1 comment:

Kayathri said...

//ஆடைக் கிழித்துக் கொண்டவனையே
பைத்தியம் என்கிறது பார்...கண்மணி.
மனதை கிழித்துக் கொண்டவனுக்கு
என்னப் பெயர்....!// அருமை...