Monday, July 19, 2010
ஒரு மனதின் நினைப்பு..!
சிறகு முளைத்த மனம்...
சிந்தனை குவிந்த புத்தி...
கவிதை முளைத்த கற்பனை...
கனவு காணும் விழிகள்...
விழிகளில் முளைத்த விடியற்காலை கனவு...
சாரல் விழும் விடியற்காலை....
விண்ணை முட்டி நிற்கும் மலைகள்...
மலைமுதுகு வருடும் மேகங்கள்....
மொட்டின் மீது அமரும் பனித்துளி....
உறங்கும் குழந்தை உதிர்க்கும் புன்னகை...
படி இறங்கும் பாவாடைப் பெண்ணின் துள்ளல்....
தம்பியின் கரம் பற்றி அழைத்துச் செல்லும் தமக்கை...
பால் கொடுக்கும் பெண்ணின் பாசப்பார்வை...
குழந்தை கேசம் கோதும் விரல்கள்...
இழந்த சோகம் தேடும் மனங்கள்...
இருந்த சுகம் நாடும் மனங்கள்...
இருண்ட வாழ்வில் தொலைதூர வெளிச்சப்புள்ளிகள்...
எங்கோ தொலைவில் சிவந்து கிடக்கும் சூரியன்...
கைத்தடி ஊன்றி கால்வீசி நடக்கும் முதுமை...
அவரின் நிழலாய் தொடரும்...வறுமை....
வறுமை தந்த வெறுமை...
முதுமையின் முதுகு வளைக்கும் காலம்...
தள்ளாமையின் போதும்
" நினைவுத் துள்ளும்" கோலம்....
பருவ மழையின் படையெடுப்பில்
படகு விடும் பருவம்...
பசுவின் மடியில் பால் கரக்கும் உருவம்...
நினைவின் மடியில் நிசம் எடுக்கும் உருவம்....
சாகத்துடிக்கும் மனது...
சாகா வரம் வேண்டும் உடம்பு....
வாழத் துடிக்கும் வயது.............
இப்படியாகத்தான்.......
பொழப்பு கெட்டுப் போகுது போ...!?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்லாருக்கு நண்பரே.. நிறையப் படியுங்கள்; நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்
மிக்க நன்றி உழவரே, உம்மைப் போன்றோரை படிக்கத்தான் ஆசை. படித்துக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment