Thursday, June 17, 2010

"இந்திய தேசமே" -1

ஏ எழுச்சி மிக்க வரலாற்றை பெற்ற இந்திய தேசமே,
இந்த தேசத்தின் சொந்த வித்துக்களாய் வாழும் இந்தியர்களே,
நாம் உடைந்துக் கிடந்த போது இந்தியா இல்லை.
நாம் ஒற்றுமையின்றி இருந்தபோது...
நம்மை உருக்குலைத்த அந்நிய சக்தி...!
நாம் ஒன்றிணைந்த போது ...
நமக்கு வழி விட்டு விலகியது
உலகம் கண்ட உண்மை.
இப்போது ....
மீண்டும் அதே அந்நிய சக்தி....
உருவாகி வரும் இந்தியாவை...
உடைத்தெரியும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
உங்கள் கண்களை கொஞ்ச நேரம்
என் பக்கம் திருப்புங்கள்.

அமெரிக்காவின் சதிவலையில்...
அழிந்துபோன சாம்ராச்சியங்கள்
எத்தனை? ...எத்தனை??
மிகப்பெரும் வல்லரசாக
உருவெடுத்து நிலைத்து நின்ற "சோவியத் யூனியன்"
சரிந்துபோன சரித்திரம்...
மறந்து போனாயோ?!.
அதுசரி...!
மறதி உனக்கென்ன புதுசா?.
உலகில் அமைதியாய் இருக்கும் இடங்களில் எல்லாம்
தன் "சூழ்ச்சி ஆப்பை" சொருகி...
சண்டை மூட்டி விட்டுவிட்டு....பின்
தானே சமாதானம் செய்யப்போகும்...
"பச்சை களவாணி" தனமெல்லாம்...
கைவந்த கலை அமெரிக்காவுக்கு.
இதன் நோக்கமென்ன..???
உற்று கவனியுங்கள்...
தன்னிடம் இருப்பதை விற்க வேண்டிய
கட்டாயம் இந்த அமெரிக்காவுக்கு.
அவனிடம் என்ன இருக்கிறது...?
எதை விற்கப்போகிறான்..?
தக்காளியா? வெங்காயமா??
இல்லை தேசமே...இல்லை.
உலகுக்கு ஊருசெய்யும் கொடுமையான
இரசாயன ஆயுதங்கள்... இன்னும் பிற ஆயுதங்கள்....
இதை விலை கூறி விற்றால் பரவாயில்லை.
கேடு கெட்ட அமெரிக்கா...சூழ்ச்சியாக
தன்னிடம் இருக்கும் ஆயுதங்களுக்கு
செயற்கையாக "தேவையை" ஏற்படுத்துகிறது.
(நம் நாட்டு பருப்பு வியாபாரிகள் போல்)
நினைத்துப் பார்.
நீயும் நானும் அமைதியாக இருந்தால்...
அவனுடைய ஆயுதம் விற்பனையாகுமா?
"நம்ம வடிவேலு அண்ணன் மாதிரி"
"எதப் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்"
என்ற கொள்கையில்....அமெரிக்கா...
முதலில் இசுலாமிய நாடுகளில் சண்டை மூட்டினான்.
எப்படி? ....எதற்காக?
உலகின் அத்தியாவசியத் தேவையான....
எரிப்பொருள்......!! அது
இசுலாமிய நாடுகளில்தானேக் கிடைக்கிறது.
அதற்காகத்தான்.
சண்டை வராது என்ற பட்சத்தில்....
சின்ன சின்ன குழுக்களாய் ...
தீவிரவாதிகளை உருவாக்கி,
உள்நாட்டு கலவரங்களை உண்டாக்கி,
தீவிரவாதிக்கும் அதிநவீன ஆயுதம் விற்று...
தீவிரவாதியின் தாக்குதலை சமாளிக்க...
சம்மந்த்ப் பட்ட நாட்டுக்கும் ஆயுதம் விற்று....
இரண்டு பக்கமும் இலாபம் பார்க்கும் "நம்ம ஐடியா" எப்படி..??
சரி இலாபம் பார்த்தால் போதுமா?
"நல்லவன்னு"ம் பெரிய "இவன்னும்" பேர் வாங்க வேண்டாமா??
அதுக்குத்தான் "ஆள் இன் ஆல் அழகு ராசா கட்டப் பஞ்சாயத்து"
பண்றான் இந்த அமெரிக்கா.
நம்ம பாசையில இதுக்கு "பிள்ளையையும் கிள்ளி...தொட்டிலையும் ஆட்டி"
அதேதான் ராசா. பயபுள்ள கெட்டியா புடுச்சிக்கிறியே...!
இப்படி தனக்கு சமமானவர்களை சமயம் பார்த்து...
கால் இடறி....பின் கை கொடுத்து தூக்கிவிட்டு....??
இந்த மொல்லமாறித் தனமெல்லாம் யாருக்காவது வருமா? ...ராசா.
அமெரிக்காவைத் தவிர??

No comments: