Wednesday, November 30, 2011

”புதிராகும் மலர்..!”


தென்றலை வெறுக்கும் மலர்
புயலை நம்பி புறப்பட்ட அதிசயம்
பூமியில் நிகழ கண்டேன்.

பூத்திட்ட ஒரு பூவும்
காம்பினை கை விட்ட
காட்சியும் கண்டேன்.

இதயத்தின் வேர்களில் 
திராவகம் ஊற்றி செல்லும்
கொடுமையின் பிடியில்
உயிர்க்குலையும் ஒடுக்கம் கண்டேன்.

ஒவ்வொரு வினாடியும்
கரைவது கண்களின் முன்னே
மறைவது கண்டு மயக்கம் கண்டேன்.
வெறுமைகளின் மடியில் மனம் வேக கண்டேன்.

அடியும் காணாது அதன் முடியும் காணாது
ஆடிக் காற்றில் பறக்கும் மலரின் 
ஆர்வ கோளாறில்....! 
வீழ்ந்து கிடப்பது செடி மட்டும்தானே.

பூத்துக் கிடந்த செடி இன்று
காத்து கிடக்கிறது அதன் மலருக்காய்...!!

4 comments:

மதுரை சரவணன் said...

//பூத்திட்ட ஒரு பூவும்
காம்பினை கை விட்ட
காட்சியும் கண்டேன்.//

arumai..vaalththukkal

பிரேமி said...

”பூத்துக் கிடந்த செடி இன்று
காத்து கிடக்கிறது அதன் மலருக்காய்...!!” மலர் வருமா?.....

test said...

//ஒவ்வொரு வினாடியும்
கரைவது கண்களின் முன்னே
மறைவது கண்டு மயக்கம் கண்டேன்//
அருமையான வரிகள்!

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கலக்கல் மக்கா...!!!