முன்னும் பின்னும் முரண்தொடை பேசும்
மூப்பும் இளமையும்
கொல்லும் மூச்சுத் திணறல்
யாக்கை இளைக்க
யாண்டும் உழைக்கும்
வாழ்க்கை வளைக்க
வளைக்க கூன்..!!
உந்தித் தள்ளும்
முன்வினை முந்தும்
பிறப்பின் வழிநீளும்
பேராசை மூளூம்
இறப்பின் வழிதேடும்
விடைகாணாப் பயணம்..!!
உறுப்பிணி உறுத்தும்
ஊணதை வருத்தும்
மிச்சமில்லா வாழ்வில்
அச்சமில்லா துவாழ
அஞ்சும் மனது,-
அறிவின் பிழை
ஆறும் ஐந்தும்
கூட்டிப் பெருக்கும்
குப்பைத் தொட்டி
கூடிகூடி கழியும்
காணாமல் போகும்
வாழ்வொன்றில் – காணும்
கனவுகள் ஏராளம்.-
உறவுகள் தரும்
உறவினில் வரும்
உயிர்வலி கூடும்
கட்டிக் கிழியும்
கந்தல் ஆடை..!!
முந்தியவனும் பிந்தியவனும்
முந்தானை தந்தவளும்
பந்தியில் வைத்த
பாசம் தாங்க
அந்தியும் விடியலுமாய்
அலையும் வாழ்க்கை
அல்லும் பகலும்
ஆனதுதான் என்ன??
திக்குத்தெறியா
தீவில் தெற்கு எதுவெனத்
தேடும் மனிதம்
கற்காதப் பாடம்
வாழ்க்கை,- இருளைக்
கிழிக்கும் ஒளியென
அறிவை திறக்கும்
ஆயுதம் ஒன்று
அரிவை துறக்கும்
அகல் ஒளி...!!
பரிவும் பிரிவும்
ஒன்றை ஒன்று
தின்னும் பசிப்பிணி
அன்றோ..?! நன்று
கொல்லும் நானிலம் என்று வெல்லும்..??

No comments:
Post a Comment