Wednesday, December 10, 2014

நெற்கதிர்..!


கணினி வரையும் நெல்மணிக் கதிர்
கண்ணுக்கு விருந்தா கடும்பசிக்கு விருந்தா
புண்ணுக்கு மருந்து புனையலாம் கணினி
மண்ணுக்கு விருந்து விளைதல்

கணினித் திரையிலா..? எருது பூட்டும்
ஏர்முனைக் கிழிக்கும் நிலத்தின் மட்டும்
கூர்முனை அமிழ்ந்தும் குளம்படி பட்டும்
சேர்தனை அடிக்கும் உழவர்தம்

கூட்டம் எதிர்கொள் இயற்கைத் தாக்கம்
கூடுமோ ஒருவரி மேற்கோள் இட்டும்
காடும் கழனியும் கணினியில் போற்றி
ஆவதென்ன ஆனதென்ன நாட்டில்

உழவர் வர்க்கம் பிழைக்க வைக்கும்
உண்மை நிலைதான் உருவாகா வரைக்கும்
உனக்கும் எனக்கும் உயிர்நடுக்கம் பெருக்கம்
வயிற்றுச் சுருக்கம் காணா

வரைக்கும் வாழ்வின் அடிப்படை புரியா
நிலைக்கும் தாழ்மை அடைந்தே கற்கும்
கடைநிலை அறிவை கழற்றி வைப்போம்
உழவர் வாழ்க்கை உயர்த்துவோம்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்கள் இல்லையேல் நாம் ஏது...?

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... நண்பா மீண்டும் வலைப்பூவில் சாரலாய் இறங்கி இருக்கிறாய்... வாழ்த்துக்கள்...

முகநூலில் வாசித்த கவிதை என்றாலும் இங்கும் வாழ்த்துக்கள்டா..

கரந்தை ஜெயக்குமார் said...

உழவர் வாழ்வை உயர்த்துவோம்
நன்று சொன்னீர்

ஊமைக்கனவுகள் said...

பரிவை சே குமார் அவர்களின் தளத்தில் இருந்து வருகிறேன்.
தங்களின் நெற்கதிர்,கருத்துச் சுமைதரித்துத் தலைதாழ்த்தி இருக்கிறது.

இதயத்தின் சாரலின் ஈரத்தில் உண்மை
உதயத்தின் பாடல் உயிர்க்கும் - பதம்சேர
வாழ்த்தும்‘உம் நற்பணிகள் வாழ்த்தியே யென்சிரம்
தாழ்த்தும் தமிழ்க்காத லா!!!


வந்தார் பயனின்றி வாழ்ந்தார் இடருற்று
நொந்தார் எனவுலகில் நில்லாமல் - செந்தமிழைச்
சொந்மெனக் கொண்டீர் சிகரத்தில் வைத்தற்குச்
சிந்தனையும் உள்ளச் செயல்!

பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா!!!

நன்றி அய்யா!
தங்களைத் தொடர்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

உழவர்களை சிறப்பிக்கும் சிறப்பான கவிதை! அருமை! நண்பர் சே.குமார் தளம் மூலம் தங்களை பற்றி அறிந்தேன்! முதல் வருகை! இனி தொடர்கிறேன்! நன்றி!

Yarlpavanan said...

உழவர் வாழ்க்கை உயர்த்துவோம்.
சிறந்த பாவரிகள்

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

Geetha said...

வணக்கம்..பாடல் அருமை...எனது சொந்த ஊர் அரியலூர்..உங்கள் பதிவை பார்த்ததும் ஊர் பாசம் வந்துவிட்டது...வாஇப்பதிவர் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம் விழாக்குழு சார்பாக...நன்றி