Monday, February 24, 2014

"தலை..மை...!”

ஒருகை யகல நிலம் ஆள
இருகை கூப்பி தலை வணங்க
வருகை தரும் தலைகள் பாரடா..!

உவகை கொள்ள ஏதுமிலா
உயர்ந்த குறிக் கோளுமிலா
தளர்நடை தலைவரை காணடா..!

மாறுகை ஓங்கி மண்ணில்
மாறுகால் வாங்கா நிலையில்
நூறுகால் நடுவதை தடுப்பதாரடா..!

தாரகை கள்விற்கும் தந்திரமும்
தாரை வார்த்த கண்ணீரும்
தமிழனை அழிப்பது கேளடா...!

மனிதம் கொன்று மண்ணை
ஆளும் மிருகம் நமக்கு
தலைமை கொள்ளல் ஏனடா..?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் நல்ல கேள்வி...!

தமிழ்க்காதலன் said...

வாங்க தனபாலன் ஐயா அவர்களே, உங்களின் அடர் வாசிப்பில் மனம் நிறைகிறேன். உங்கள் பணி பாராட்டுக்குரியது.